கலாப்ரியா
 
இவரைப் பற்றி...

1950இல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம். கடந்த 50 ஆண்டு காலமாக நவீனக் கவிதையின் தற்காலச் சுடரொளியாயும் தணலாயும் கனன்று கொண்டிருக்கிறார். கலாப்ரியாவின் கவிதைகளும் நாவல்களும் துயரத்தில் புரண்டு கொந்தளித்து எழும் சொற்களால் ஆனவை. கலாப்ரியாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘வெள்ளம்’ 1973இல் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து 23 கவிதைத் தொகுப்புகளும் ‘கலாப்ரியா கவிதைகள்’ என்கிற தலைப்பில் 4 பெருந்தொகுப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. சிறுகதை, கட்டுரைகள், நாவல் எனச் சுமார் 46 நூல்களைப் படைத்துள்ளார்.

எழுதிய கட்டுரைகள்

x