பத்திரிகையாளராக 2000-ம் ஆண்டு முதல், இலக்கியத்தில் 2007 முதல் இயங்கி வருபவர். ‘வேட்கையின் நிறம்’, ‘பனிப் பாலை பெண்’, ‘ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு’ ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களை எழுதியவர். ‘திரைவழிப் பயணம் 2012’,‘சாம்பல் பூத்த மலர்கள் 2018’ ஆகிய உலக சினிமா கட்டுரைத் தொகுப்பு நூல்களை எழுதியவர். ‘நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை’ சிறுகதைத் தொகுப்பு, ‘நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்’ எனும் குறுநாவல், ‘கடோபநிஷத்’, ‘கடைசி தேநீர்’ உள்ளிட்ட புத்தகங்களின் நூலாசிரியர்.