எனது பெயர் ஆ.நல்லசிவன். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை. எம்.ஏ. ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளேன். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறேன். தினமும் ஏராளமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு. தேடல்கள் மூலம் தினமும் புதிய புதிய அனுபவங்கள். ஒரு பத்திரிகையாளனாக நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எப்போதும் மனதுக்கு ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் தரும் எனது பணி. ஒரு பத்திரிகையாளனாக பெருமை அடைகின்றேன்.