அதிபர் தேர்தல் | மீண்டும் எர்டோகன் வென்றிருக்கிறார்... ஆனால் துருக்கி மாறியிருக்கிறது!

By செய்திப்பிரிவு

அங்காரா: துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் அங்காரா உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில் 5 சதவீத ஓட்டு வித்தியசாத்தியத்தில் அதிபர் பதவிக்கான வெற்றியை தவறவிட்ட துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லு, எர்டோகனின் வெற்றியை ”நியாயமில்லாத தேர்தல்” என்று விமர்சித்துள்ளார்.

வெற்றி குறித்து துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் முன் பேசிய எர்டோகன், “இது துருக்கியின் வரலாற்றில் மிக முக்கிய தேர்தல். வென்றது நாங்கள் மட்டுமல்ல, துருக்கியும் வென்றது. போய் வாருங்கள் கெமல்” என்று பேசி இருக்கிறார். மேலும், எல்ஜிபிடிகியூ மக்களையும் தனது வெற்றி உரையில் கடுமையாக எர்டோகன் விமர்சித்திருக்கிறார்.

மேலும், வெற்றிக் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினரான எர்ஹன் குர்த், எர்டோகன் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாறும் துருக்கி: எர்டோகனின் வெற்றி துருக்கியின் அரசியல் கள நிலவாரத்தை முழுமையாக விவரித்திருக்கிறது. அதாவது, துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் எர்டோகன் வென்றிருக்கிறார். ஆனால், துருக்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியிருக்கிறது.

நிலநடுக்க பாதிப்புகளை எர்டோகன் கையாண்ட விதம், நாட்டின் பணவீக்கம் 44% -ஐ எட்டியது போன்றவை எர்டோகனின் நீண்ட கால ஆட்சிக்கும் எதிராக அதிர்வலையை அங்கு தீவிரமாக ஏற்படுத்தியது. இதையடுத்துதான், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். ஆனாலும், அதிர்வலையை மீறி எர்டோகன் வென்றிருக்கிறார்.

எனினும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த துருக்கி தற்போது இல்லை. துருக்கி அரசியல் ரீதியாக பல்வேறு மாறுதல்களை கொண்டிருக்கிறது. துருக்கியின் ஒட்டுமொத்த ஆதரவு நிலைப்பாட்டை எர்டோகன் இழந்துவிட்டார். எர்டோகனும் அரசியல் ரீதியாக மாறுதல்களை மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கிறார்.

முந்தைய காலத்தில் தன் ஆட்சியின் மீது வைக்கப்பட்ட தீவிர விமர்சனங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளை எர்டோகன் எடுக்க போகிறார், பழைமைவாத கருத்துகளிலிருந்து அகன்று எல்ஜிபிடிகியூ மக்களின் பக்கம் நிற்பாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்