‘‘அமெரிக்கா மீது வடகொரியா எந்தவித தாக்குதலை நடத்தினாலும், அதற்கு பதிலடியாக கடும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்த்துள்ளது. அத்துடன் அணு குண்டைவிட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டையும் சோதனை நடத்திவிட்டது. மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர்.
இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பதற்றமான இந்த சூழ்நிலையில் தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் வந்தார். அப்போது நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேட்டிஸ் கூறியதாவது:
அமெரிக்கா மீதோ அல்லது எங்கள் நட்பு நாடுகளின் மீதோ வடகொரியா எந்த தாக்குதல் நடத்தினாலும், அதற்கு பதிலடியாக கடும் ராணுவ நடவடிக்கையை அந்த நாடு சந்திக்க வேண்டியிருக்கும். அணு ஆயுதங்களை காட்டி மிரட்டினாலோ அல்லது தாக்குதல் நடத்தினாலோ அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அந்த தவறை செய்து விடாதீர்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம், பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். அதுதான் சரியானதாக இருக்கும்.
இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் எச்சரித்துள்ளர்
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago