ஓர் ஆண்டுக்கு முன்னர் மரணம் அடைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதனையொட்டி அவரது இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
தாய்லாந்து மன்னராக 70 ஆண்டுகாலம் இருந்த பூமிபால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13- ம் தேதி மரணமடைந்தார். தொடர்ந்து ஓர் ஆண்டு காலம் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பூமிபாலின் இறுதிச் சடங்கு, லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இன்று (வியழக்கிழமை) மதியம் நடைபெறுகிறது.
சுமார் 250,000 மக்கள் பூமிபாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன. பூமிபாலின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து தாய்லாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதிச் சடங்கில் உலகெங்கிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
தங்கத்தலான நினைவிடம்
இறுதிச் சடங்குக்குப் பிறகு, மறைந்த மன்னர் பூமிபாலின் உடல் தங்கத்தாலான நினைவிடத்தில் வைக்கப்படவுள்ளது.
அந்த நினைவிடத்தில் தாய்லாந்தின் பாரம்பரியங்களையும் மன்னர் பூமிபாலின் ஆட்சியையும் விவரிக்கும் ஏராளமான சிலைகள், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஓர் ஆண்டாக கட்டப்பட்ட இந்த நினைவு மண்டபத்தின் மேற்பரப்பு முழுவதும் தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago