காதலியைக் கரம் பிடிக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (59) தனது காதலியான லாரன் சான்செஸ் (51) என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்கென்சி ஸ்காட் என்பவரை ஜெஃப் பெசோஸ் முதலில் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, லாரன் சான்செஸ் என்ற பெண்ணை ஜெஃப் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார். பத்திரிகையாளரான லாரன் சான்செஸ் உடனான காதலை, ஜெஃப் 2019-ஆம் அண்டு வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது. இந்த இணையருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜெஃப் பெசோஸ் தனது காதலியான லாரன் சான்செனஸுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்தாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தில் அவர் சில காலம் இருந்துள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி நிறுவப்பட்டது. அமேசான் நிறுவனத்தை சாதாரண புத்தகக் கடையாகச் தொடங்கி, அதன்பின் படிப்படியாக வளர்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜெஃப் பெசோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்