இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயரான சீக்கியர்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் குடியேறியது.

கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள். அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் பிர்டி.

இங்கிலாந்தில் டர்பன் அணிந்த முதல் சீக்கிய மேயர் என்ற பெருமையையும் ஜஸ்வந்த் சிங் பிர்டி பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

உலகம்

11 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்