சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

By செய்திப்பிரிவு

கார்ட்டூம்: சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர்.

ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான் விடுதலை இயக்கம் சூடான் ராணுவப் படைகளைத் தாக்கியதில் இருந்து அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பிற்குள் அதிகாரப் போராட்டம் நடந்து வருகிறது. கண்மூடித்தனமான ஆயுத தாக்குதல்களால் அங்கு பொது மக்கள் நீண்டகாலமாகவே சிக்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் துன்பத்தை எதிர் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூடானில் சமீபத்தில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரால் இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர பாதிப்பை சந்தித்துள்ளதாக ஐ .நா தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் சூடானின் பதற்றமிக்க இடங்களில் சிக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மருத்துவமனைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பெண்கள் தொடர்ந்து சிகிச்சை எடுக்க முடியாத சூழலும் நீடிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சூடான் உள்நாட்டுப் போர்: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படையினருக்கும் - துணை ராணுவ (ஆர்எஸ்பி) தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதுவே தற்போது சூடானில் உள்நாட்டு போராக மாறியுள்ளது. போரில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்