ரக்கைன்: மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் 'மொக்கா' நேற்று (மே 14) தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிரப் புயலாகக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.
மொக்கா புயலினால் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடும் தேசத்தை எதிர்கொண்டுள்ளன. இதில் மியான்மரே மொக்கா புயலினால் நேரடி பாதிப்பை சந்தித்துள்ளது. மணிக்கு 210 கிமீ வேகத்தில் வீசிய காற்றினால் மியான்மரில் செல்போன் டவர்கள், வீடுகளின் கூரைகள் என அனைத்தும் காற்றில் தூக்கி வீசப்பட்டன. குறிப்பாக மியான்மர் துறைமுக நகரமான சிட்வே, தலைநகர் ரக்கைன் மொக்கா புயலினால் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. புயலினால் பெய்த மழையினால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலினால் மியான்மரில் தகவல் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரக்கைன் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது என்று மியான்மர் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியன்மருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளால் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கியுள்ள ஒரு நாட்டில் இதுபோன்ற அதிதீவிர புயல் தாக்குவது என்பது ஒரு கொடுங்கனவு போன்றதே. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
» IPL 2023 | தோனி பேட்டிங்கில் இன்னும் முன்னால் களமிறங்க வேண்டும்!
» ‘ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை; படிப்பினைகள் உள்ளன: எஸ்டிபிஐ அறிக்கை
மொக்கா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி மியான்மர் ராணுவம் இதுவரை முழுமையாக வெளியிடவில்லை.
மொக்கா புயலை ஒட்டி வங்கதேசம் மற்றும் மியான்மரில் 4 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ந்தனர்.
மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் இந்த மொக்கா புயலினால் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொக்கா புயலில் அகதிகள் முகாம்கள் குறைந்த அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago