ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், "மத்திய ஏமனிலுள்ள அல் பைடா நகரில் அமைந்துள்ள ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது திட்கட்கிழமை அமெரிக்க ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த முகாம்களில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஏ.கே 47 துப்பாக்கிப் பயிற்சி, வெடுகுண்டு வீசும் பயிற்சி, ராக்கெட்களை ஏவுவது முதலான பயிற்சிகளை அளித்து வந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், கிழக்கே ஓமன் என்று எல்லைகள் கொண்ட ஏமன் சன்னி, ஷியா பிரிவினர்களின் மோதலால் உள் நாட்டுப் போருக்கு உள்ளாக்கியுள்ளது.
iஇதில் ஐஎஸ் தீவிரவாதிகளும் ஏமன் அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏமனுக்கு ஆதரவாக அமெரிக்கா, சவுதி
ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சவுதி மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் ஏமனில் ஐஎஸ் தீவிரவாத முகாம் மீது சவுதி நடத்திய வான்வழித் தாக்குதலில் தீவிரவாதிகள் 66 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago