மெக்சிகோவை மீண்டும் உலுக்கிய புதிய பூகம்பம்: பீதியில் மக்கள்

By ஏபி

இந்த மாதத்தில் மெக்சிகோவை சக்தி வாய்ந்த 3 பூகம்பங்கள் உலுக்கின. செப்டம்பர் 7ம் தேதி ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவு பூகம்பம், செப்டம்பர் 19-ம் தேதி ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவு பூகம்பம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது 6.1 என்று ரிக்டரில் பதிவான பூகம்பமும் மெக்சிகோவை உலுக்க மக்கள் மரண பீதியில் உள்ளனர்.

இந்தப் புதிய பூகம்பத்தின் மையம் ஓக்சாகா மாகாணத்தின் மத்தியாஸ் ரொமீரோவுக்கு 20 கிமீ தென் கிழக்கே இருந்தது. ரிக்டர் அளவில் இது 6.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்.19-ம் தேதி பூகம்பத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் மெக்சிகோ நகரவாசிகள் காணாமல் போன தங்கள் உறவினர்கள், நண்பர்கள் இடிபாடுகளிலிருந்து உயிருடன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். மெக்சிகோ சிட்டியில் 57 பேரும் மொரிலோஸ் மாகாணத்தில் 73 பேரும், பியுப்லாவில் 13 பேரும் குவெரோவில் 6 பேரும், ஒக்சாகாவில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்கள் அருகே மக்கள் தங்கள் உறவினர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.

கலகலவென கொண்டாட்டமும் கும்மாளமுமாக இருக்கும் மெக்சிகோ நகரத் தெருக்கள் சுடுகாடாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் 6.1 என்று ரிக்டரில் பதிவான புதிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை மரண பீதிக்கு இட்டுச் சென்றுள்ளது. இதுவரை 2 பூகம்பங்களுக்கும் சுமார் 400 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்