ஜெட்டா: சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டதால் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் தாயகம் திரும்புகின்றனர். அங்கு தொடர்ந்து 3-வது வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 ரக விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சூடானில் மீட்கப்படும் இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் மேலும் 231 பேர் நேற்று ஜெட்டா நகரிலிருந்து விமானம் மூலம் அகமதாபாத் அழைத்து வரப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று ட்விட்டரில், “ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானிலிருந்து மீட்கப்பட்ட 231 இந்தியர்கள் ஜெட்டா நகரிலிருந்து அகமதாபாத் நகருக்கு புறப்பட்டனர். இது இந்தியர்களை மீட்டு வரும் 10-வது விமானம் ஆகும்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago