மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் கொல்லப்பட்ட நிலையில் 28 இந்துக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மியான்மர் போலீஸார் கூறும்போது, "மியான்மரிலுள்ள ராக்கைன் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 28 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களில் 20 பேர் பெண்கள், 8 பேர் குழந்தைகள். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர்” என்றனர்.
மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் அப்பகுதியிலிருந்த நூற்றுக்கு மேற்பட்ட இந்துக்கள் காணமல் போனதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதியில் கொல்லப்பட்ட நிலையில் 28 இந்துக்கள் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைகளை முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள்தான் நடத்தியிருப்பார்கள் என்று அந்நாட்டு அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்துக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago