பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்: நாசா தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் இன்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன.

இவற்றை தவிர்த்து நாளை ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது. சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்க உள்ளது. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்