இஸ்லாமாபாத்: கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை 2001-ம் ஆண்டு உருவாக்கின. அடுத்த சில ஆண்டுகளில், இந்த அமைப்பு பிராந்தியங்களுக்கு இடையேயான வலுவான சர்வதேச அமைப்பாக உருவெடுத்தது.
இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2017-ம் ஆண்டில் நிரந்தர உறுப்பினர்களாயின. இந்த அமைப்பின் கூட்டம், கோவாவில் மே 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இந்த கூட்டத்தில் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழு பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலூச் நேற்று அறிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்திய பின் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படவில்லை.
பிலாவல் புட்டோவின் இந்திய வருகையால், இரு நாடுகள் இடையே உறவு சுமூகமாகும் வாய்ப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago