இர்மா சூறாவளிக்கு புளோரிடாவில் 25% வீடுகள் சேதம்

By ஏபி

புளோரிடாவில்  25% வீடுகளை இர்மா சூறாவளி சேதப்படுத்திச் சென்றுள்ளது.

மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்துக்கு வீசிய இர்மா சூறாவளி திங்கட்கிழமை மதியம் புளோரிடாவைக் கடந்தது சென்றது. ஜார்ஜியாவை நோக்கி பயணப்பட்டு அங்கும் ஏராளமான சேதங்களை இர்மா ஏற்படுத்தியது.

புளோரிடாவில்  சுமார் 25% வீடுகள்  இர்மா சூறாவளியால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் படையினர் தொடர்ந்து புளோரிடாவில் இர்மா சூறாவளி பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் தொலைபேசி ஒயர்கள் மற்றும் மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அதனை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா நிவாரண முகாம்களில் 1 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை புளோரிடாவில் இர்மா புயலுக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

புளோரிடாவில் பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் குறித்து புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் கூறும்போது,  "நாம் செய்வதற்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. நாம் மீண்டும் புளோரிடாவை உருவாக்குவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்