மெக்சிகோ நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61- ஆக அதிகரித்துள்ளது.
மெக்ஸிகோ நாட்டின் தென் பகுதியில் சியாபஸ் மாநிலம் உள்ளது. இதன் கடற்கரை நகரான டொனாலாவில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் சுமார் 70 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 8.1 ரிக்டர் அலகாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நில நடுக்கம் குறித்து வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் பினா நியாட்டோ கூறும்போது,
"மெக்ஸிகோவை தாக்கிய நிலநடுக்கங்களில் இந்த நூற்றாண்டின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் சுமார் 5 கோடி மக்கள் இதை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 61 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் ஜுஹிதான் நகரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. மின்சாரம் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எங்களிடம் இதனை எதிர்கொள்ள சக்தி உள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago