மியான்மரில் ராணுவ வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி; பலர் காயம்

By செய்திப்பிரிவு

நேபியேட்டோ: மியன்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

மியான்மரில் சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தனர். இப்பகுதியில் இன்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு மியான்மர் ராணுவம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் ராணுவத்தின் இம்முடிவை உலக நாடுகள் பலவும் எதிர்த்த நிலையில், ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் மியான்மரின் தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தை ராணுவம் நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்