சனி கிரகத்தை 20 ஆண்டுகளாகச் சுற்றி வந்து முழுதும் வாயுக்கிரகமான அது குறித்த செயற்கரிய தகவல்களை பூமிக்கு அளித்து வந்த கேசினி விண்கலம் பணி நிறைவடைந்ததால் அதன் செயல்பாடு இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அரிய விண்கலமான இது சனியின் வளிமண்டலத்தில் தாழ்வாகப் பறந்து இறுதியில் தீப்பந்தாக மாறி பணியை நிறைவு செய்தது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா தெரிவித்தது. திட்டமிட்டபடி அதன் 20 ஆண்டுகால பணிக்காலம் நிறைவுற்றது. இந்திய நேரம் மாலை 5.25 மணிப்பட் கேசினி விண்கலத்திலிருந்து கடைசி சிக்னலை நாஸா பெற்றது. இதனையடுத்து பணி நிறைவுற்றது, இனி அறிவியல்தான், அறிவியலுக்கு நன்றி என்று நாஸா செய்தி வெளியிட்டுள்ளது.
1997-ம் ஆண்டு கேசினி விண்கலம் பூமியை விட்டுப் புறப்பட்டு சனிகிரகத்தை 2004-ம் ஆண்டு வந்தடைந்தது. பூமியிலிருந்து இவ்வளவு தூரம் விண்வெளியில் எந்த ஒன்றும் இதுவரை சென்றது கிடையாது என்பதே கேசியின் ஒரு சாதனையாகும்.
வியாழனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம் சனிக்கிரகமாகும். இதன் பரப்பு மிகப்பெரிது, எவ்வளவென்றால் சுமார் 763 பூமிகளை இதில் அடக்கி விடலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பூமியின் எடையை விட இது 95 மடங்குதான் அதிகம். சனி ஒரு ராட்சத வாயுக்கிரகம், இதன் உட்பகுதி மிகச்சிறியது. சூரியனிலிருந்து மிகமிகமிகத் தொலைவில் இருப்பதால் இதன் வெப்ப நிலை மிகமிகக் குறைவு. பிற கிரகங்களில் காணப்படாத தட்டையான ஒரு வளையம் போன்ற ஒன்று சனியில் காணப்படுவதே இதன் சிறப்பு. கிரகத்தின் மேற்பரப்பு முழுதும் பனிதான்.
எத்தனையோ பனிக்கட்டிகள் சனியை சுற்றியுள்ளன. இவையே வளையங்களாகத் தோன்றுகின்றன. இது போன்று எண்ணற்ற வளையங்கள் இருப்பதாக அமெரிக்க அறிவியலாளர்களால் ஏவப்பட்ட வாயேஜர் விண்கலம் மூலம் தகவல் வந்தது.
சுமார் 13 ஆண்டுகள் சனியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து தகவல்களை அனுப்பிய கேசினி விண்கலம் அதன் வளையங்கள், டைட்டன் என்ற துணைக்கோள் குறித்து ஏராளமான அரிய புகைப்படங்கள், தகவல்களை அனுப்பியது. சனியின் மாறும் பருவகாலங்கள் குறித்த தகவல்களை அனுப்பியது.
சனியின் நிலவின் பெரிய அளவிலான புவியீர்ப்பு உந்துதலினால் சனியின் வளையங்களுக்குள் 22 முறை பாய்ந்த கேசினி விண்கலம் இதுவரை எதுவும் செல்ல முடியாத 2,700 கிமீ வெளிக்குள் நுழைந்தது. பிறகு செப்.15ம் தேதி சனிக்கிரகத்துக்குள்ளேயே கேசினி நுழைந்தது. பனிப்பாறைகளின் பெரும்பிளவுகளிலிருந்து ஹைட்ரஜன் வாயு வெளிவருவதால் உயிர்களுக்குத் தோதான நீர்-வெப்ப நடவடிக்கைகள் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஏப்ரலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இத்தகைய அரிய பணியைத் திறம்பட செய்து முடித்து பூமிக்கு சனிக்கிரகம் பற்றிய அதிசயத் தகவல்களை வழங்கிய கேசினி விண்கலம் இன்று வானில் தீப்பந்தாக மாறி பணியை நிறைவு செய்ததற்கு விஞ்ஞானிகள் பிரியாவிடை அளித்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago