வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக,கடந்த 2018-ம் ஆண்டு ட்ரம்ப் மீது ஸ்டார்மி அவதூறு வழக்கு தொடுத்தார். இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரூ.2.4 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்டார்மிக்கு மேலும் ரூ.2 கோடி அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 9-வது சர்க்யூட் கோர்ட் அப்பீல்ஸில் ஸ்டார்மி மேல் முறையீடு செய்தார்.இந்த வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஸ்டார்மி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மேல்முறையீட்டு செலவாக ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது.
நடிகை ஸ்டார்மியுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதே நாளில் இந்தத் தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 mins ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago