உண்மைகளை திரித்துக் கூறுவதால் கத்தாருடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்று சவுதி அரேபியா கூறியுள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மான், கத்தார் தலைவர் ஷேக் தமிம் அல் தனியுடன் வெள்ளிக்கிழமையன்று கத்தாருடன் அரேபிய நாடுகளுக்கு நிலவும் பிரச்சினை குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன் முடிவில் கத்தாருடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்ற முடிவுக்கு சவுதி வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "சவுதி மற்றும் கத்தார் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் கத்தார் சார்பில் அரேபிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை முன் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் கத்தார் உண்மைகளை திரித்துக் கூறுவதால் அதனுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது“ என்று கூறியுள்ளது.
ஆனால் கத்தார் தரப்பில் இந்த உரையாடல் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் கத்தார் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பானது என்று கூறப்பட்டுள்ளது.
கத்தார் மீதான பொருளாதார தடைக்கு பிறகு சவுதி, துருக்கி தலைவர்களின் தொலைபேசி உரையாடல் முதல் முறையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago