சவுதி அரேபியாவின் மினா நகரில் சாத்தான் மீது கல் வீசும் சடங்கில் நேற்று சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்றனர். முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் புனித யாத்திரை. ஹஜ் பயணம் என்பது மெக்கா மாநகரில் மூன்று புனித தலங்கள் சென்ற பின் பூர்த்தி அடைகிறது. ஹஜ் யாத்திரையின் இறுதி முக்கியச் சடங்கான சாத்தான் மீது கல்வீசும் நிகழ்வு மினா அருகில் நேற்று நடைபெற்றது.
கடந்த 2015-ம் ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது மினா நகரில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 2,300 பேர் உயிரிழந்தனர். ஹஜ் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக இது கருதப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் மினா நகரில் இந்த ஆண்டு யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சீருடைப் பணியாளர்களை சவுதி அரசு அமர்த்தியிருந்தது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
2015-ம் ஆண்டு நெரிசலில் ஈரானை சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவும் ஈரான் - சவுதி அரேபியா இடையிலான அரசியல் பதற்றம் காரணமாகவும் கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈரான் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஈரானில் இருந்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago