புதிய பொருளாதாரத் தடையையும் பொருட்படுத்தாமல் வடகொரியா வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணை சோதனையை தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட தகவலில், "வடகொரியா ஜப்பானுக்கு அப்பால் அமைந்துள்ள வடக்கு பசிபிக் கடலில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை 3,700 கிலோமீட்டர் பயணம் சென்று இலக்கை தாக்கக் கூடியது. இந்த ஏவுகணை தொடர்ந்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது " என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதார தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago