வடகொரியா அமெரிக்க ராணுவ தளமான குவாம்மை குறி வைத்து புதிய ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கக் கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஐ. நா. விதித்த புதிய பொருளாதாரத் தடையையும் மீறி வடகொரியா மீண்டும் ஜப்பானுக்கு அப்பால் உள்ள பசிபிக் கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை ஜப்பான் பொறுத்து கொண்டிருக்காது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்த நிலையில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸ்னோரி ஒனடேரா வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனை அமெரிக்காவின் ராணுவ தளமான குவாம்மை குறிவைத்து நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒனடோரா கூறும்போது, "வடகொரியா இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு பசிபிக் பகுதியில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றிய அதன் உள் நோக்கத்தை நம்மால் கண்டறிய முடியாது.
எனினும் அமெரிக்காவின் ராணுவ தளமான குவாம்மை குறிவைத்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியிருக்கலாம் என்Ru நான் எண்ணுகிறேன்.
வடகொரியா நடத்திய அந்த ஏவுகணை 3,700 கிலோமீட்டர் பயணம் சென்று இலக்கை தாக்கக் கூடியது. அந்த ஏவுகணை ஏவப்பட்டது முதல் அது கடலில் மூழ்கியவதுவரை அதனை நாங்கள் கண்காணித்தோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago