வடகொரியா மீதான புதிய பொருளாதார தடைக்கு ஐ.நா. சபை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த செம்டம்பர் மாதம் 3-ம் தேதி 6-வது முறையாக அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இது உலக நாடுகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்நாட்டு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடைக்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் திங்கட்கிழமை கொண்டுவந்தது.
அந்த தீர்மானத்தில் வடகொரியாவுக்கு பெட்ரோல் மற்றும் எண்ணெய் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை ஆகியவை இடப்பெற்றிருந்தன.
இதில் வடகொரியாவுக்கு பெட்ரோல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்தது. இதனையடுத்து வடகொரியா மீதான புதிய பொருளாதார தடை ஒருமனதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, "நாங்கள் சரியானவற்றை செய்ய வடகொரியாவை வலியுறுத்தினோம். ஆனால் தற்போது அவர்களை தவறானவற்றை செய்வதிலிருந்து தடுத்து கொண்டிருக்கிறோம்.
வடகொரியாவுடன் போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணுஆயுத சோதனைகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டால் உலகில் சமாதானமாக வாழ முடியும்"என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago