ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஆங் சான் சூச்சி கூறியுள்ளார்.
மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதுவரை 87 ஆயிரம் பேர் மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு இடப்பெயர்ந்துள்ளதாக ஐ. நா. கூறியிருந்தது.
மியான்மரில் நடக்கு வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் மியான்மரில் வன்முறை குறித்து சூச்சி இன்று (புதன்கிழமை)வெளியிட்ட அறிக்கையில், "மியான்மர் நெருக்கடி குறித்து தவறாக புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் சிறுபான்மையின மக்கள் வங்கதேசத்துக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் இங்குள்ள சமூகத்தினரிடம் பொய்யான தகவலை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்துக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago