அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு 8 ஆம் இடம்

By செய்திப்பிரிவு

பெர்ன்: அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2022 -ல் உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாமிடத்தில் இருந்தது.

உலக நாடுகளில் அதிகம் மாசைந்த நாடாக மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சாட் (Chad) உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம் ஆகிய நாடுகள் மாசைந்த நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில் அதிக மாசடைந்த நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சீனாவின் ஹோட்டான் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த நகரங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ராஜஸ்தானின் பிவாடி நகரம் உள்ளது. தலைநகர் டெல்லி 4வது இடத்தில் உள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் உள்ள PM 2.5 - அளவை ( காற்றில் உள்ள தூசின் அளவு) வைத்தே அதன் மாசு நிலை அறியப்படுகிறது. PM 2.5 - அளவு அதன் இயல்பான அளவைவிட ஒரு மைக்ரோ கிராம் கூடினால் அந்நகரத்தில் காற்று மாசினால் சுவாச கோளாறுகள் ஏற்படும். மேலும், இந்த அறிக்கையில் தெற்காசிய நாடுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகப்படியான மாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளன. இங்கு PM 2.5 அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கும் அளவை காட்டிலும் 7 மடங்கு அதிகமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்