மியான்மரில் சிறுபான்மையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் ஆங் சான் சூச்சியிடம் கேட்டுக் கொண்டார்.
மியான்மரில் பவுந்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மியான்மரில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடந்த வன்முறை சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக எதிராக நடந்துவரும் வன்முறை எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் துருக்கி அதிபர் எர்டோகன்.
இந்த நிலையில் மியான்மரில் நடைபெறும் வன்முறைகள் குறித்து மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
அந்த உரையாடலில் எர்டோகன், மியான்மரில் சிறுபான்மையினர் நடத்தப்படும் வன்முறைகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு துன்பம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் 'நிறவெறி' காலகட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago