வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஜப்பான் பொறுத்துக் கொண்டிருக்காது என்று ஐப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஐ. நா. விதித்த புதிய பொருளாதாரத் தடையையும் மீறி வடகொரியா மீண்டும் ஜப்பானுக்கு அப்பால் உள்ள பசிபிக் கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏவுகணை சோதனை நடத்தியது.
இதுகுறித்து ஜப்பான் பிரதர் ஷின்சோ அபே டோக்கியோ செய்தியாளர்களிடம் கூறும்போது, "வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளன. வடகொரியாவின் நடவடிக்கையை இனியும் ஜப்பான் பொறுத்துக் கொள்ள முடியாது. வடகொரியா தொடர்ந்து இதே பாதையில் பயணம் பண்ண நினைத்தால். அந்நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடையாது. இதனை வடகொரியா உணர வேண்டும்" என்றார்.
மேலும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஐ. நா. பாதுகாப்புப் சபையிடம் அவசர கூட்டத்துக்கு ஹின்சோ அழைப்பு விடுத்துள்ளதுடன் சர்வதேச நாடுகள் ஒற்றுமையாக இருப்பதற்கு இதுதான் தருணம் என்று ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும்; அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago