அமெரிக்காவுக்கு இணையான ராணுவ பலத்தை அடைவதே இறுதி இலக்கு: வடகொரியா

By ஏஎஃப்பி

அமெரிக்காவுக்கு இணையான ராணுவ பலத்தை அடைவதே  வடகொரியாவின் இறுதி இலக்கு என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா வெள்ளிக்கிழமையன்று ஹவசாங் - 12 என்ற ஏவுகணையை பசுபிக்கின் வடக்குப் பகுதியில் செலுத்தியது.  இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவியது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வடகொரியாவின்  மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியது.

இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ பலம் குறித்து அதிபர் கிம் ஜோங் உன் கூறியதாக வடகொரிய அரசு ஊடகம், "அமெரிக்காவுக்கு இணையான ராணுவ பலத்தை அடைவதே நமது இறுதி இலக்கு. வடகொரியாவின் ராணுவத்தை பேசுவதற்கு அமெரிக்கா பயப்படும் வண்ணம் நம் ராணுவ பலம் இருக்க வேண்டும்.

அணு ஆயுத சோதனைகளில் இறுதிக் கட்டத்தை வடகொரியா அடைந்துவிட்டது. இதன் முடிவில் ஒட்டு மொத்த பலத்தையும் வடகொரியா பயன்படுத்தும்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ. நா. கண்டனம்

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்