அட்லாண்டிக்கடல் சூறாவளி வரலாற்றில் இல்லாத அளவுக்கு பயங்கரமான இர்மா என்று பெயரிடப்பட்ட சூறாவளி கரீபியத் தீவுகளான பர்புடா அதனருகில் உள்ள ஆண்டிகுவாவைத் தாக்கியது.
இதன் பாதையில் புயெர்டோ ரிகோ, டொமினிகன் ரிபப்ளிக், ஹைதி, கியூபா ஆகியவை உள்ளன கடைசியாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இந்தப் படுபயங்கர சூறாவளி வார இறுதியில் தாக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புளோரிடா மாகாணத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார்.
கடந்த வாரம் ஹூஸ்டனைப் புரட்டி எடுத்து நாசம் செய்த ஹார்வி புயல் 4-ம் எண் புயல் என்றே வகைசெய்யப்பட்டது, ஆனால் இர்மா அதை விடவும் பயங்கரமானது என்பதால் 5-ம் எண் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பர்புடாவில் அதிகாலை கடந்த இந்தப் புயல் பயங்கரச் சப்தத்துடன் காற்றையும், மழையையும் ஏற்படுத்தியுள்ளது, ஆண்டிகுவாவிலும் கட்டிடத்தின் பகுதிகள் காற்றில் பறந்து செல்வதைக் காண முடிந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வ எச்சரிக்கையே, “கடவுளுக்குக் கருணை இருந்தால் நம்மைக் காப்பாற்றட்டும்” என்ற வாசகங்களுடன் வெளிவந்துள்ளது.
பர்புடாவில் போலீஸ் நிலையத்தின் மேற்கூரையைப் பெயர்த்து எடுத்து வீசியதால் உள்ளேயிருந்த காவலர்கள் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். தொடர்புச் சாதனங்கள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
பிறகு இர்மா தன் கைவரிசையை செயிண்ட் பார்த்தலமே மற்றும் செயிண்ட் மார்ட்டின் தீவுகளைப் புரட்டிப் போட்டது. இங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உஷ்ணமான நீர்தான் இத்தகைய கடுமையான சூறாவளிகளுக்குக் காரணமாகிறது. அதுவும் 5-ம் எண் சூறாவளி என்பது இதுவரை பலரும் பார்த்து அனுபவிக்காத ஒன்று என்று அதிகாரிகள் தரப்பிலேயே கூறப்படுகிறது.
இர்மா தாக்கத்தினால் வடக்கு லீவர்ட் தீவுகளில் பேரலைகள் 11 அடி அல்லது 3.3 மீட்டர்கள் எழுச்சியுறலாம் என்றும் துர்க்ஸ் மற்றும் கெய்கோ தீவுகள், தென்மேற்கு பஹாமாஸில் 6 மீட்டர்கள் உயரம் அல்லது 20 அடி உயரம் கொண்ட பேரலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயெர்டோ ரிகோ கவர்னர் ரிகார்டோ ரொசெல்லோ எச்சரிக்கையில், “இந்த நிகழ்வின் அபாயகரம் இதுவரை நாம் பார்த்திராதது” என்று கூறியுள்ளார். மேலும் சூறாவளித் தாக்கம் அடைந்த பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மின்சாரம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago