பெய்ஜிங்: சீன அரசு ராணுவத்துக்கு கடந்தஆண்டு 1.45 லட்சம் கோடியுவான் (ரூ.17.22 லட்சம் கோடி) நிதி ஒதுக்கியது. இந்நிலையில், இவ்வாண்டு 1.55 லட்சம் கோடி யுவான் (ரூ.18.45 லட்சம் கோடி) நிதியை சீனா ஒதுக்கியுள்ளது.
லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக சீனா இந்தியாவுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிகழ்வையடுத்து சீன ராணுவம் லடாக் எல்லைப் பகுதியில் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தத் தொடங்கியது. அமெரிக்கா உடனும் சீனாமோதல் போக்கைக் கடைபிடித்துவருகிறது. மேலும், தைவானைதங்கள் நாட்டுடன் இணைக்கும்முயற்சியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் சீனா அதன் ராணுவ பட்ஜெட்டை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
ராணுவத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளது. அமெரிக்கா 2023-ம்ஆண்டுக்கு 816 பில்லியன் டாலர் (ரூ.66.91 லட்சம் கோடி)ராணுவத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியா 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago