மிரட்டல் விடுக்கும் குழப்பவாதி ட்ரம்ப் தகுந்த பரிசு பெறுவார்: கிம் ஜோங் உன் எச்சரிக்கை

By ஏபி

டொனால்ட் ட்ரம்பை குழப்பவாதி என்றும் அவரின் மிரட்டல்களுக்கு 'தகுந்த பரிசு' பெறுவார் என்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய கிம், ''நாட்டின் உயரிய தலைமைப் பொறுப்பை வகிக்கும் தனிச்சிறப்புக்குத் தகுதியற்றவர் ட்ரம்ப்.

நெருப்புடன் விளையாடும் முரட்டுத்தனமானவர். கொரியாவை முழுவதுமாக அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்த அவர் நிச்சயம் 'தகுந்த பரிசு' பெறுவார்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, தென் கொரியா நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சோதனைகளை நிறுத்திக் கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும் வடகொரியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

கடந்த 3-ம் தேதி வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியில் சீறிப் பாய்ந்து கடலில் விழுந்தது. இது 2,300 மைல் தொலைவை 19 நிமிடங்களில் கடந்தது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் குவாம் தீவை எங்களால் அழிக்க முடியும் என்று வடகொரியா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், தன்னையும் தன் அண்டை நாடுகளையும் பாதுகாக்க, வட கொரியாவை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிம் ஜோங் உன், கொரியாவை முழுவதுமாக அழித்துவிடுவதாக ட்ரம்ப் விடுத்த மிரட்டலுக்கு அவர் நிச்சயம் 'தகுந்த பரிசு' பெறுவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய ஊடகங்கள், அமெரிக்க அதிபரை நேரடியாகத் தாக்கிப் பேசிய கிம்மின் முதல் பேச்சு இது என்று தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்