கராச்சி: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு தீவிர கடன் சுமை உள்ளது. இதனால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடி யாத நிலையில் நாட்டின் பொரு ளாதாரம் உள்ளது.
பாகிஸ்தான் அதன் மருந்து தயா ரிப்புக்கான மூலப்பொருட்களில் 95 சதவீதம் இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வது தடை பட்டுள்ளது. ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட மருந்துகள் கராச்சி துறைமுகத்துக்கு வந்துள்ளன. ஆனால், அவற்றுக்கான பணத்தை வழங்க போதிய கையிருப்பு இல்லை.
இதன் காரணமாக உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள்தயாரிப்பைக் குறைத்து வருகின்றனர். இதனால் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான மயக்க மருந்து கையிருப்பு 2 வாரங்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச்சூழலில் மருத்துவத் துறையில்வேலையிழப்பும் அதிகரித் துள்ளது.
ஐஎம்எஃப் நிபந்தனை
நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்ய பாகிஸ்தான் அரசு சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) உதவிகோரி உள்ளது. ஆனால், ஐஎம்எஃப் தீவிர நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு பாகிஸ் தான் உடன்படும் பட்சத்தில் ஐஎம்எஃப் கடன் 6.5 பில்லியன் டாலர் (ரூ.53,950 கோடி) வழங்குவதாக தெரிவித்துள்ளது. வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ஐஎம்எஃப் முன்வைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் கடனுக்கான வட்டி விகிதத்தை 200 புள்ளிகள் உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் வட்டி விகிதம் 17% ஆக உள்ளது. இது 19% ஆக உயர்த்தப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago