1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

அங்காரா: துருக்கியில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. அவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள்வசித்தனர். அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் வீடுகளை இழந்துமுகாம்களில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளது என்று துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம்தெரிவித்தது.

அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. அதற்கான டெண்டர்கள், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தல்: துருக்கியில் அதிபர் தேர்தல்நடைபெற உள்ளது. இதனால்ஓராண்டுக்குள் புதிதாக வீடுகளை கட்டி முடிக்க அதிபர் எர்டோகன் உறுதி அளித்துள்ளார். எனினும், வீடுகள் கட்டும்போது பூகம்பம் நிகழும் துருக்கியில் அதற்கேற்ப பாதுகாப்பான முறையில் வீடு கள் கட்டப்பட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE