சிரியாவின் மத்தியிலுள்ள அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐஎஸ் இயக்கத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமை ஆணையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட தகவலில், சிரியாவின் அலெப்போ நகரின் வடக்குப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் மூலம் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிலவற்றை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஐஎஸ் இயக்கம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிரியாவின் அரசு ஊடகமான சனா, ஐஎஸ் இயக்கம் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்னர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்காக சிரிய அரசும், அமெரிக்காவும் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago