வடகொரியா புதிய ஏவுகணை சோதனை வெற்றி

By ஏபி

அமெரிக்கா, தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணுஆயுதங்களைச் சுமந்து செல் லும் புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

ஐ.நா., மற்றும் சர்வதேச விதி முறைகளை மீறி வடகொரியா அரசு ஏவுகணை சோதனை, அணு குண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளையும் வடகொரியா மிரட்டி வருகிறது. அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பகிரங்கமாகவே கூறியது.

இந்நிலையில் தென் கொரியா வின் புதிய அதிபராக கடந்த வாரம் மூன் ஜே இன் (64) பதவி யேற்றார். அவருக்கும் அமெரிக்கா வுக்கும் மிரட்டல் விடுக்கும் வகை யில் வடகொரியா நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லும் திறன் படைத்தது என்று ஜப்பான் பாது காப்புத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.

வடகொரியா தாக்குதல் நடத்தினால், அதைச் சமாளிக்க பசிபிப் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. இது குறித்து பசிபிக் பிராந்திய அமெரிக்க கமாண்டர் நேற்று கூறும் போது, ‘‘வடகொரியா எந்த வகை யான ஏவுகணையை சோதனை செய்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அல்ல’’ என்று கூறினார்.

இதுகுறித்து அமெரிக்க பாது காப்புத் துறை நிபுணர்கள் கூறிய போது, வடகொரிய ஏவுகணை கள் அமெரிக்காவின் குவாம் பகுதி வரை பாய்ந்து தாக்கும் திறன் படைத்தவை. எனவே அமெரிக்கா முன்னெச் சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்