லாகூர்: பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவை எரிபொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை விநியோகம் செய்வதில்லை என பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான விநியோகஸ்தர்கள் சங்கமும் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு பல மாதங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது லாகூர், குஜ்ரன்வாலா, ஃபைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
» பூகம்ப மீட்பு நடவடிக்கைகள் சுணக்கம்: துருக்கி அதிபர் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி
» பூகம்பம் பாதித்த துருக்கியில் இந்தியாவின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி?
லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேஸ் விநியோகிக்கும் நிலையங்களிலும் பல நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், சில நிலையங்கள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியும் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago