நோய்களை கண்டறிய மோப்பம் பிடிக்கும் ரோபோ - இஸ்ரேல் அறிமுகம் செய்கிறது

By செய்திப்பிரிவு

டெல்அவிவ்: உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

வெட்டுக்கிளிகள் தங்கள் தலை மீதுள்ள 2 உணர்கொம்புகள் மூலம் பொருளை மோப்பம் பிடிக்கின்றன. உணர்கொம்புகளை போன்ற உணர்கருவியை இஸ்ரேலின் டெல் அவிவ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.

இந்த உணர்கருவியை ரோபோவில் பொருத்தி அதற்கு மோப்பம் பிடிக்கும் திறனை கொடுத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் கட்டமைப்புகளுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. நோய்களை கண்டறியவும் பாதுகாப்பு சோதனைகளை மேம் படுத்தவும் இந்த ரோபோக்கள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE