கலிபோர்னியா: அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர். பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவங்கள் நேற்று ஜனவரி 23ல் நடந்துள்ளன.
முன்னதாக கடந்த சனிக்கிழமை கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மீண்டும் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
கலிபோர்னியாவில் ஒரு காளான் பண்ணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் சான் ப்ரான்சிஸ்கோ தெற்கே ஒரு கடலோர பகுதியில் ட்ரக்கிங் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர அயோவாவில் நடந்த இன்னொரு சம்பவத்தில் இரண்டு பதின்ம வயது மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து சான் மடியோ கவுன்ட்டி ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை, தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
» “உக்ரைன் போர் முடிவுக்கு வராததற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்” - ரஷ்யா
» ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம்: இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக துருக்கி கொந்தளிப்பு
கடந்த ஆண்டு 647 மாஸ் ஷூட்டிங் சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளது. துப்பாக்கி வன்முறை ஆவண காப்பக தகவலின்படி 2022ல் அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி சூட்டில் மட்டும் 44 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்கொலையால் இறந்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago