’எதிரி’ விவகாரம்: ஈரான் - தென்கொரியா மோதல்

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் "எதிரி" என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில், தென்கொரிய அதிபர் யூன் சு- யோல் பேசும்போது, ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரிய பிரதமர் பேச்சுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரிய பிரதமர் பேச்சுக்கு விளக்கமாளிக்குமாறு, ஈரானில் உள்ள வெளியுறவு தூதரகத்துக்கு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நஜாஃபி பேசும்போது, “ தென்கொரியா, ஈரானுடன் "நட்பற்ற அணுகுமுறையை" பின்பற்றுகிறது. தென் கொரிய வங்கிகளில் ஈரானிய நிதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கத் தடைகளின் கீழ் முடக்கப்பட்ட எங்கள் நிதியில் 7 பில்லியன் டாலர்களை தென்கொரியா விடுவிக்க வேண்டும் என்று ஈரான் பலமுறை கோரியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தென்கொரியா இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிம் பேசும்போது, அமீரகத்தில் உள்ள தென்கொரிய பாதுகாப்புப் படையினரை ஊக்கப்படுத்துவதற்காகவே பிரதமர் அவ்வாறு கருத்துகளை தெரிவித்தார். இதில் வேறேதும் இல்லை. இதில் ஈரானுடனான வெளியுறவை விமர்சிக்கவில்லை. ஈரானுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதில் அரசாங்கத்தின் விருப்பம் மாறாமல் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

மேலும்