போர்க் கொடூரத்தை அனுமதிக்கக்கூடாது: ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

By கார்டியன்

அமெரிக்காவில் பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, போரில் ஏற்பட்ட கொடுமைகள் மீண்டும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்று உறுதிமொழி ஏற்றார்.

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஷின்சே அபே அவ்வாறு கூறினார்.

1941-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரில், அமெரிக்க ராணுவ விமான தளத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பேர்ல் துறைமுகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார் அபே.

ஹவாய் சென்றடைந்ததும், அங்குள்ள பசுபிக் தேசிய நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பேர்ல் துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்வில் அபேவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உடனிருந்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும்போது, "இரண்டாம் உலகப் போரில் வீர மரணமடைந்த அமெரிக்க வீரர், வீராங்கணைகளுக்கு ஜப்பானின் பிரதமராக எனது மனபூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். போரில் ஏற்பட்ட கொடுமைகள் மீண்டும் நடக்கக் கூடாது. ஜப்பான் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக அமைதியை விரும்புபவர்களாக வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதுக்கு மன்னிப்பு ஏதும் ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தின் நினைவகத்துக்கு வருகை தந்த முதல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆவார்.

முன்னதாக, கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா, இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்