பீஜிங்: சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் சீனாவில் 1000 பேருக்கு 7.52 என்ற குழந்தை பிறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டில் இதன் அளவு 6.77 ஆகக் குறைந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம், பிறப்பு விகிதத்தைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.18 ஆக உள்ளது.
2016 -ம் ஆண்டிலேயே "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெறவும் அந்த நாடுஅனுமதி வழங்கியது. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035-ம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவின் மக்கள் தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.
இதனால் சீனாவின் மாகாணங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகை திட்டங்களை உருவாக்கியுள்ளன. சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago