புதுடெல்லி: ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 4 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
» நஷ்டத்தில் கின்னஸ் சாதனை - ரூ.15 லட்சம் கோடி இழந்த எலான் மஸ்க்
» பாகிஸ்தானில் உணவு பஞ்சம் - 3 வாரங்களில் திவாலாகும் என எச்சரிக்கை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு கருத்துக் கணிப்பு நிறுவனமான அட்லான்டிக் கவுன்சில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய எந்த நாட்டுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து சர்வதேச அளவில் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. இந்தியா நிரந்தர உறுப் பினராக வாய்ப்பிருப்பதாக 26 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா விரைவில் இணையும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago