ஆசிய வம்சாவளி நபரின் பாஸ்போர்ட் நிராகரிப்பு: இயந்திரத்துக்கு புரியாமல் போன யதார்த்தம்

By ராய்ட்டர்ஸ்

கண்கள் திறந்திருந்தபோதும் புகைப்படத்தில் கண்கள் மூடியிருப்பதாகக் கூறி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து நபர் ஒருவரின் பாஸ்போர்ட்டை நிராகரித்துள்ளது பாஸ்போர்ட் அலுவலக மென்பொருள்.

ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து மனிதர் ரிச்சர்ட் லீ. 22 வயது பொறியியல் மாணவர். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க எண்ணி, நியூசிலாந்து உள்துறை அமைச்சகத்திடம் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். லீயின் புகைப்படத்தை, ஆன்லைன் பாஸ்போர்ட் புகைப்பட சரிபார்ப்பு மென்பொருள் சோதனையிட்டுள்ளது.

அதில் லீ தன்னுடைய கண்களைத் திறந்திருந்தும் கூட, 'லீயின் கண்கள் மூடியிருப்பதால், அவரின் புகைப்படம் செல்லாது' என்று அந்த மென்பொருள் நிராகரித்துவிட்டது.

இதுகுறித்துக் கூறிய லீ, ''இதுகுறித்து எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. எனக்கு எப்போதுமே சிறிய கண்கள்தான். முகத்தைச் சரிபார்க்கும் தொழில்நுட்பம்தான் முன்னேற வேண்டும்.

அது வெறும் மென்பொருள்தானே. அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. கடைசியில் எனக்குப் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது'' என்றார்.

நியூசிலாந்து உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துப் பேசும்போது, ''ஆன்லைன் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு வரும் படங்களில், பல்வேறு காரணங்களுக்காக 20% வரையிலான புகைப்படங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

பொதுவாக கண்கள் மூடியிருப்பதாகக் கூறப்பட்டே பெரும்பாலான புகைப்படங்கள் நிராகரிக்கப்படும்.

லீயின் புகைப்படத்தில் லைட்டிங் சரியாக இல்லாமல் இருந்தது. அடுத்த புகைப்படத்தில் சரிசெய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்