“என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்” - ஹாரி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்கள்

By செய்திப்பிரிவு

லண்டன்: தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம் எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி அதில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் சிலவற்றை ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப் பிரபலமான அரச குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் வெளியாகி உள்ளன.

''மேகன் மார்கலை நான் திருமணம் செய்து கொள்வதை வில்லியம் விரும்பவில்லை. கடினமானவர், முரட்டுத்தனமானவர், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்றெல்லாம் மேகன் மார்க்லை வில்லியம் அழைத்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் எனது சட்டை காலரை பிடித்து இழுத்தார். நான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்தார். அப்படியே கீழே தள்ளினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது போய் நான் விழுந்தேன்.

அந்தப் பாத்திரம் எனது முதுகில் கீரிவிட்டது. சிறிது நேரம் நான் அப்படியே படுத்துக் கிடந்தேன். அதன்பிறகு எழுந்து, அவரை வெளியே போகச் சொன்னேன். இவை எல்லாமே மிக வேகமாக நடந்து முடிந்தன. இந்தச் சம்பவத்தால் எனக்கு முதுகில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான், என் மனைவி மேகன் மார்க்லிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் இதை கவனித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்'' என்று ஹாரி தெரிவித்துள்ளார்.

மேகன் மார்கல் உடனான திருமணத்தை அடுத்து கடந்த 2020-ல் அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஹாரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்