சமையல் எரிவாயுவை பலூன்களில் நிரப்பிச் செல்லும் பாகிஸ்தான் மக்கள்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் (சமையல் எரிவாயு) எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காரக்மாவட்டத்தில் கடந்த 2007 முதல்மக்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வில்லை. ஹங்கு நகரில் 2 ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சமையல் எரிவாயுவை மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மானிய விலையில் ரேஷனில் வழங்கப் படும் கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றின் விலையை பாகிஸ்தான் அரசு 25 முதல் 62 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஏழைகளுக்கு இந்த விலை உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் மாதத்துக்கு 40 கிலோ கோதுமை மாவு, 5 கிலோ சர்க்கரை மற்றும் 5 கிலோ நெய் மட்டுமே பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்