மேயராக இருந்தபோது சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளையே சுட்டுக் கொன்றேன் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட். கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை போதை ஒழிப்பு தொடர்பான டியுடெர்ட் ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலதிபர்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய டியுடெர்ட் கூறியதாவது, "நான் தாவோ நகரின் மேயராக இருந்தபோது சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளையே சுட்டுக் கொன்றேன். என்னால் செய்ய முடியும் என்றால் உங்களால் (போலீஸாரால்) முடியாதா? குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் போலீஸார் இறங்க வேண்டும்" என்று கூறினார்.
டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த ஜுன் 30-ஆம் தேதி பதவி ஏற்றது முதல் இதுவரை குற்றவாளிகள் என 5,000பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago