அணு ஆயுதக் கொள்கை குறித்த ட்ரம்ப் கருத்தை நெருக்கமாக பின்தொடரும் சீனா

By ஏபி

அமெரிக்கா தனது அணு ஆயுதத் திறனை பெரிய அளவில் வலுப்படுத்த வேண்டும் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் கூறியதையடுத்து அவரது அணு ஆயுதக் கொள்கைகளை நெருக்கமாக பின் தொடர்ந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை பெரிய அளவில் வைத்திருக்கும் நாடுகள் முதலில் அவற்றை கைவிடுவதன் மூலம் முன்னிலை வகிக்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பெண்டகன் அதிகாரிகளை அன்று சந்தித்த டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்கா தனது அணு ஆயுதப் பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது, அதாவது உலகம் அது குறித்த உணர்வை எட்டும் வரையில் அமெரிக்கா வலுப்படுத்தவே செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

உலக அணு ஆயுதங்களில் பெரும்பான்மை அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடமே குவிந்துள்ளன. சீனாவும் அணு ஆயுத நாடுதான். ஆனால் அது 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், “பெரிய் அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அணு ஆயுதங்களைத் துறக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளன. இந்நாடுகள் இதில் முன்னிலை வகிப்பதுதான் முழுமையான அணு ஆயுதத் துறப்பு சாத்தியம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்